சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது


செய்முறை:

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்கி விசில் போனதும் மசித்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சத்தான பச்சை பயறு குழம்பு ரெடி!!!

Rates : 0

Loading…