சத்தான பட்டர் பீன்ஸ் கேரட் பொரியல் எப்படிச் செய்வது

சத்தான பட்டர் பீன்ஸ் கேரட் பொரியல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

ப்ரெஷ் பட்டர் பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 50 கிராம்
சாம்பார் பொடி – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் – 1
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது


செய்முறை :

* கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.

* பட்டர்பீன்ஸ், கேரட் இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள பட்டர்பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

* கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

* சுவையான பட்டர்பீன்ஸ் – கேரட் பொரியல் ரெடி.

* சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

Rates : 0

Loading…