சின்ன வெங்காய குருமா எப்படிச் செய்வது

சின்ன வெங்காய குருமா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 20 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது – 20 கிராம்,
தேங்காய் – 2,
கடலை எண்ணெய் – 50 மி.லி.
கொத்தமல்லி தூள் – 5 கிராம்,
மஞ்சள் தூள் – 5 கிராம்,
நெய் – 10 மி.லி,
முந்திரி – 30 கிராம்,
முழு கரம் மசாலா-3 கிராம்,
கொத்தமல்லி – 50 கிராம்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

1. சின்ன வெங்காயத்தின் தோலை உரித்தெடுத்து, இத்துடன் தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து முழுமையாக வேக வைக்கவும்.
5. இந்தக் கலவையுடன் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. இதில் நெய், உப்பு சேர்க்கவும். அதன் மேல் கொத்தமல்லி இலை, வறுத்த கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…