தஹி பப்டி சாட் செய்வது எப்படி

தஹி பப்டி சாட் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பப்டி/சின்ன தட்டுவடை – 12-14
இனிப்பு சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
கெட்டியான தயிர் – 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (மசித்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
ஓமப்பொடி – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்

இனிப்பு சட்னிக்கு…

பேரிச்சம் பழம் – 8 (விதை நீக்கியது) புளி – சிறு நெல்லிக்காய் அளவு வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கிவிட்டு, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் தயிரில் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தட்டில் தட்டுவடைகளை வைத்து, அதன் மேல் சிறிது மசித்த உருளைக்கிழங்கு வைத்து, மேலே சிறிது வெங்காயத்தை வைத்து, மேலே சிறிது தயிரை ஊற்றி, உப்பு தூவி, இனிப்பு சட்னியை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவினால், தஹி பப்டி சாட் ரெடி!

Rates : 0

Loading…