தீப்புண் காயங்களை ஆற்ற எளிமையான மருத்துவ முறை

தீப்புண் காயங்களை ஆற்ற எளிமையான மருத்துவ முறை

மனிதர்களுக்கு நேரடியாக நெருப்பினாலோ, அல்லது சூடான எண்ணெய் நீர் போன்றவைகளாலோ தீப்புண் காயங்கள் ஏற்படுகின்றது.

அவ்வாறு ஏற்படும் தீப்புண் காயங்களை ஆற்றி விடுவதற்கு கீழ்க்கண்ட எளிய முறையைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

நாகலிங்க மரத்து இலையை அரைத்து அத்துடன் பசுவெண்ணை கலந்து போட, தீப்பட்ட ரணம், கொப்புளம், புண் எரிச்சலின்றி ஆறும்.

மாவிலைகளை எரித்துச் சாம்பலாக்கி அதனை வெண்ணெயில் குழைத்து தீப்புண் மீது பூசிவர சீக்கிரம் ஆறும்.

வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து, தீப்பட்ட புண்ணில் பூச, 1 வேளை பூச்சிலேயே புண் ஆறிவிடும்.

தீப்பட்ட புண்கள் மீது வெற்றிலையை வைத்துக் கட்டலாம். கையை நெருப்பில் சுட்டுக் கொண்டால், சுண்ணாம்பை, சிறிது தேங்காய் எண்ணெயுடன் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொண்டு, அதில் கையை வைத்துக் கொண்டு இருந்தால், எரிச்சல் இருக்காது.

நெருப்பினால் ஏற்படும் புண்களுக்கு, நன்றாகக் கனிந்த வாழைப் பழங்களைப் புண்களின் மீது தடவி, வெற்றிலையால் மூடித் துணியினால் கட்டி விடவும். தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும்.

Rates : 0

Loading…