துளசி கொழுக்கட்டை எப்படிச் செய்வது

துளசி கொழுக்கட்டை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
துளசி – ஒரு கைப்பிடி அளவு,
வெற்றிலை – 6,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பச்சை ஃபுட் கலர் – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

துளசி, வெற்றிலையை நீரில் அலசி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் உப்பு, எண்ணெய், சீரகம், பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். துளசி – வெற்றிலை சாற்றையும் சேர்த்துக் கிளறவும். இப்போது அரிசி மாவை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும். மாவை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக தயார் செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

Rates : 0

Loading…