நூடுல்ஸ் சூப் ரெடி செய்வது எப்படி

நூடுல்ஸ் சூப் ரெடி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் – கால் கப்,
கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை

கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து… உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Rates : 0

Loading…