நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா

நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா

இரவுத் தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். இரவில் தூங்கி காலையில் எழவேண்டும் என்கிற அந்த சுழற்சி முறையில் மாற்றம் உண்டானல் அது உங்கள் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். தூக்கம் வராததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

உளவியல் ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது உணவுப்பழக்கத்தில் மாற்றம், தொடர்ந்து எதைப்பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்திடும். நீண்ட நேரம் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றவை உங்கள் தூக்கத்தை கெடுத்திடும்.

தூக்கத்தை கெடுப்பதில் இன்னொரு முக்கியப் பங்காற்றுவது கனவு. நன்றாக தூங்கிக் கொண்டிருப்போம் திடிரென எதாவது ஒரு கெட்ட கனவு வந்து உங்களுடைய தூக்கத்தையே கெடுத்திடும். தூக்கத்தை சீர்ப்படுத்த இந்த உணவுகளை எல்லாம் தூங்குவதற்கு முன்னால் எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்.

ஐஸ் க்ரீம் : தூங்குவதற்கு முன்னால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாக எடுத்துக் கொள்ளும். இதனால் இரவுத் தூக்கம் தடைபடும், இரவு நேரங்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஐஸ்க்ரீம்களில் த்ரோம்போடோனின்(thrombotonin) இருக்கும். நாம் உற்சாகமாக இருப்பதற்கும் சோர்ந்து இருப்பதற்கும் நம் உடலில் இருக்கும் த்ரோம்போடோனின் தான் காரணம். இது அதிகம் சுரந்தால் நமக்கு சோர்வு என்பதே இருக்காது.

சீஸ் : சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இருந்தாலும் இதில் கொழுப்புச்சத்தும் அதிகம் என்பதால், அளவோடு பயன்படுத்துவது நல்லது. நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சீஸில் அதிக அளவில் உப்பும், ப்ரிசர்வேடிவ்ஸும் சேர்க்கப்படுகின்றன. 10 கிராம் சீஸில் 33 கிராம் கொழுப்பு உள்ளது. தூங்குவதற்கு முன்னால் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

கீரை : இரவுகளில் கீரை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். கீரைகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கும். காலை மற்றும் மதிய நேரங்களில் கீரை எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் செரிக்கும். இரவினில் எடுத்துக் கொள்வதால் உங்கள் தூக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

மது : இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காபி : காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.

சாக்லேட் : காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.

சிப்ஸ் : துரித உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.

தக்காளி இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில் சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால் வாய் வழியாக வெளியேறும். இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

இனிப்பு : இனிப்பு அதிகமாக சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும். அதாவது, தொடர்ந்து அதிகப்படியான இனிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி, நடு இரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.

மசாலா உணவுகள் : இரவு நேரங்களில் அதிக மசாலா உணவுகளைத் தவிர்த்திட வேண்டும். காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது. உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

பிரட் : உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும். காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும்.

சோடா : பெரும்பாலும் நாம் உடல் சோர்வை தவிர்க்கவும், நிறைய உணவு சாப்பிட்டால், உண்ட உணவு சீக்கிரம் செரிக்கவும் தான் சோடா அல்லது கோலா பானங்கள் பருகுகிறோம். ஆனால் உண்மையில் இவற்றை குடிப்பதன் காரணமாக தான் செரிமான பிரச்சனையும், உடல் சக்தி குறைந்து சோர்வும் ஏற்படுகின்றன. பெரும்பாலான சோடா பானங்கள் “ஹை ஃபிரக்டோஸ் காரன் சிரப்” கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இது, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்தை சீர்குலைக்க செய்கிறது. இவை இயற்கை சர்க்கரைய விட 400 – 8000 மடங்கு அதிக சுவையை ஏற்படுத்த கூடியது.

Rates : 0

Loading…