பிராக்கோலி சூப் எப்படிச் செய்வது

பிராக்கோலி சூப் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பிராக்கோலி – 1, உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம் – 2,
பூண்டு – 3 பல்,
பால் – 1/4 கப்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

குக்கரில் உருளைக்கிழங்கு, பிராக்கோலி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் அதில் பால் சேர்த்து அரைக்கவும். கடாயில் அரைத்த விழுதைப் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் போட்டு கொதிக்க விடவும். சுவையான பிராக்கோலி சூப் தயார்.

Rates : 0

Loading…