பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை எப்படிச் செய்வது

பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
பீட்ரூட் பெரியது – ஒன்று (துருவவும்),
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூளை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இரண்டு கப் நீருடன் தேங்காய் எண்ணெய், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறவும் (நான்-ஸ்டிக் வாணலியில் செய்வது எளிது). மாவு இறுகும்போது பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கி, விருப்பமான வடிவம் (உருளை, உருண்டை) கொடுக்கவும்.

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவு உருளை/உருண்டையை அதில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல், வெந்த கொழுக்கட்டையை போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Rates : 0

Loading…