மணக்கும் மாலை நேர நொறுவை மசாலா கடலை எப்படிச் செய்வது

மணக்கும் மாலை நேர நொறுவை மசாலா கடலை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

சோள மாவு, பொட்டுக் கடலை மாவு,

அரிசி மாவு தலா கால் கப்

கடலை மாவு ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை ஒரு கப்

இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் தலா ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு


எப்படிச் செய்வது

மாவு வகைகளுடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வேர்க்கடலையைக் கரைத்துவைத்திருக்கும் மாவில் புரட்டியெடுத்து பொரித்தெடுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். நிமிடங்களில் செய்துவிடக்கூடிய நொறுக்கு இது.

Rates : 0

Loading…