மோதகம் எப்படிச் செய்வது

மோதகம் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

– மேல் மாவுக்கு: களைந்து, உலர்த்தி,
அரைத்த பச்சரிசி மாவு – 2 கப்,
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
– தேவையான அளவு.
ரணத்துக்கு: தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் – தலா 2 கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.


செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். அதில்… உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். வாசனை வந்ததும், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். பூரணம் தயார்!

கொழுக்கட்டைக்குத் தயார் செய்து வைத்துள்ள மேல் மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்க… மோதகம் ரெடி!

Rates : 0

Loading…