வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல் எப்படிச் செய்வது

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

உரித்த பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – சிறிதளவு,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

* அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

* சூப்பரான பூண்டு துவையல் ரெடி.

Rates : 0

Loading…