வெள்ளரி அல்வா எப்படிச் செய்வது

வெள்ளரி அல்வா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மக்காச்சோள மாவு – 1 கிலோ,
சர்க்கரை – 1 கிலோ,
வெள்ளரி விதை – 300 கிராம்,
பச்சை கலர் பவுடர் – சிறிதளவு,
நெய்- சிறிதளவு


செய்முறை:

மக்காச்சோள மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும். லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இதைக் கெட்டியாக விடாமல் வேகமாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கொதிக்க விடக்கூடாது. கொதித்து விட்டால் கெட்டியாகிவிடும். அதனால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்வா பதத்திற்கு வந்த பிறகு மீதியிருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போல திரண்டு வரும்போது காய்ந்த வெள்ளரி விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். இறுதியாக கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். சுவையான வெள்ளரி அல்வா ரெடி!

Rates : 0

Loading…