இளநீர் பிரியாணி எப்படிச் செய்வது

இளநீர் பிரியாணி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பாசுமதி அரிசி – ஒரு கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, காய்ந்த திராட்சை – தலா 2 டேபிள்ஸ்பூன்,
இளநீர் – ஒரு கப், இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு கப்,
மில்க்மெய்ட் – கால் கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். முந்திரி, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுக்கவும். குக்கரில் அரிசியைச் சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
தேவைப்பட்டால், சூடாக இருக்கும்போதே பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

Rates : 0

Loading…