கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ் எப்படிச் செய்வது

கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நறுக்கிய புடலங்காய், பூசணித் துண்டுகள், முள்ளங்கி துண்டுகள் – தலா அரை கப்,
மாங்காய் துண்டுகள், நறுக்கிய கேரட் – தலா கால் கப்,
தக்காளி – 2 (நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்),
மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

தாளிக்க:
சீரகம், நசுக்கிய பூண்டு, எண்ணெய் – சிறிதளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து… தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். புடலங்காய், பூசணிக்காய், மாங்காய், முள்ளங்கி, கேரட் துண்டுகளை சேர்த்து… உப்பு, மஞ்சள்தூள் போட்டு, நீர் தெளித்து நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.

Rates : 0

Loading…