சுரைக்காய் கீர் எப்படிச் செய்வது

சுரைக்காய் கீர் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய சுரைக்காய் – ஒரு கப்,
மில்க்மெய்ட் – அரை டின்,
நெய் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்.


செய்முறை:

துருவிய சுரைக்காயை நெய் விட்டு வதக்கி சிறிதளவு நீர் விட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து 50 மில்லி நீர் விட்டு, சிறிது சூடாக்கி … வறுத்த முந்திரி – திராட்சை, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கி… சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.
குறிப்பு: மில்க்மெய்டுக்கு பதிலாக அரை லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி சேர்த்து, 50 கிராம் சர்க்கரையையும் சேர்த்து இதை தயாரிக்கலாம்.

Rates : 0

Loading…