சுரைக்காய் கோஃப்தா எப்படிச் செய்வது

சுரைக்காய் கோஃப்தா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய சுரைக்காய் – ஒரு கப்,
கடலை மாவு – அரை கப்,
தக்காளி – 6,
வெங்காயம் – 3,
சோடா உப்பு, இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை வதக்கி விழுதாக்கி, ஒரு கப் நீர், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, தனியே வைக்கவும். சுரைக்காயுடன் கடலை மாவு, பூண்டு, இஞ்சி – பூண்டு விழுது, சோடா உப்பு, சிறிதளவு உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, நீர் விட்டு நன்கு பிசைந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் சிவக்க பொரிக்கவும். இதன் மேலே தக்காளி – வெங்காய மசாலாவை ஊற்றிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…