சுரைக்காய் பாசிப்பருப்பு பெசரட் எப்படிச் செய்வது

சுரைக்காய் பாசிப்பருப்பு பெசரட் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பாசிப்பருப்பு – ஒரு கப்,
அரிசி – கால் கப்,
சுரைக்காய் (துருவியது) – ஒரு கப்,
இஞ்சித் துருவல் – சிறிதளவு,
வெங்காயம் – ஒன்று,
சிறிய பச்சை மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப),
சீரகம் – சிறிதளவு,
தனியே ஊறவிட்டு வடித்த பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பாசிப்பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ரவை போல் அரைத்து எடுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை சற்றே கனமாக ஊற்றி, ஊறவைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் தூவி, துருவிய சுரைக்காயையும் பரவலாக தூவி, இருபுறமும் எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுத்து, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: சுரைக்காய் துருவலை மாவுடன் சேர்த்தும் பெசரட் செய்யலாம்.

Rates : 0

Loading…