சௌசௌ ஃபிங்கர் ஃப்ரை எப்படிச் செய்வது

சௌசௌ ஃபிங்கர் ஃப்ரை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

சௌசௌ (தோல் நீக்கி, விரல் நீளத்துக்கு நறுக்கியது) – 2 கப்,
மைதா – 50 கிராம்,
அரிசி மாவு – 25 கிராம்,
பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
சோம்புப் பொடி – கால் டீஸ்பூன்,
பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் – கால் கப்,
எண்ணெய் – அரை லிட்டர்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

மைதா, அரிசி மாவு, உப்பு, பூண்டு விழுது, சோம்புப் பொடியுடன் கொஞ்சம் நீர் சேர்த்து, கட்டியின்றி கெட்டியாகக் கரைக்கவும். விரல் நீளத்துக்கு நறுக்கிய சௌசௌ துண்டுகளை மாவில் தோய்த்து, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.
இது, கலவை சாதங்களுக்கு சைட் டிஷ்ஷாக கைகொடுக்கும்.

Rates : 0

Loading…