சௌசௌ பீர்க்கங்காய் மிளகூட்டல் எப்படிச் செய்வது

சௌசௌ பீர்க்கங்காய் மிளகூட்டல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வேகவைத்த சௌசௌ – ஒரு கப்,
தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வதக்கிய பீர்க்கங்காய் – ஒரு கப்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
தேங்காய் – ஒரு மூடி (துருவவும்), மிளகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய் – சிறிதளவு.

தாளிக்க:
கடுகு, சீரகம் – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வெந்த காய்களுடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்¬றை தாளித்து சேர்க்கவும்.
இது… சாதம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது.

Rates : 0

Loading…