தர்பூசணி தக்காளி பொரியல் எப்படிச் செய்வது

தர்பூசணி தக்காளி பொரியல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தர்பூசணியின் தோல் – பழத்துக்கு நடுவே இருக்கும் வெள்ளை சதைப்பகுதி (நறுக்கியது) – ஒரு கப்,
அதிகம் பழுக்காத தக்காளி – 3 (நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்),
வேகவைத்த துவரம்பருப்பு – சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தர்பூசணி துண்டுகள், உப்பு சேர்த்து மேலும் வதங்கி, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Rates : 0

Loading…