பலாச்சுளை பச்சடி எப்படிச் செய்வது

பலாச்சுளை பச்சடி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளைகள் – 10,
பொடித்த வெல்லம் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

பலாச்சுளைகளை நார் எடுத்து, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கி, நீர் விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து… வெந்த பலாச்சுளைகள், வெல்லம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரிசி மாவை கரைத்து விட்டு, கிளறி இறக்கவும்.

Rates : 0

Loading…