பீர்க்கங்காய் சாண்ட்விச் எப்படிச் செய்வது

பீர்க்கங்காய் சாண்ட்விச் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தோல் நீக்கி, வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய் – 30 வில்லை கள்,
மைதா – 50 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – 50 கிராம்.


செய்முறை:

பீர்க்கங்காய், எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களுடன் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் தோய்த்து 7 கல் தோடு வடிவத்தில் தோசைக்கல்லில் வைக்கவும் (ஒரு வில்லையை தோசைக்கல்லின் நடுவில் வைத்து, அதைச் சுற்றிலும் 6 வில்லைகளை நெருக்கமாக வைக்கவும்). இதனை இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வேகவிட்டு எடுக்க… பீர்க்கங்காய் சாண்ட்விச் தயார்.
மொத்தம் 4 சாண்ட்விச்கள் வரும். இது மாலை நேரத்துக்கு ஏற்ற டிபன்.

Rates : 0

Loading…