மாம்பழ சட்னி எப்படிச் செய்வது

மாம்பழ சட்னி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
பச்சை மிளகாய் – 3,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஒரு கிண்ணத்தில் போடவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும். இதை தயிர் சாதத்துடன் சாப்பிட… சுவை சூப்பராக இருக்கும்.

Rates : 0

Loading…