மாம்பழ ரைஸ் கீர் எப்படிச் செய்வது

மாம்பழ ரைஸ் கீர் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
பச்சரிசி – 4 டீஸ்பூன்,
பாதாம் – 5,
பால் – ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது),
சர்க்கரை – ஒரு கப்.


செய்முறை:

பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். பாதாமை துருவவும். பாதியளவு மாம்பழத் துண்டுகளையும், பச்சரிசியையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் பாலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு இறக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்துக் கிளறவும். அரிசி நன்கு வெந்த பின்பு மீதியுள்ள மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, பாதாம் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.

Rates : 0

Loading…