முள்ளங்கி தயிர் போண்டா எப்படிச் செய்வது

முள்ளங்கி தயிர் போண்டா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய இளம் முள்ளங்கி – 150 கிராம்,
குண்டு உளுத்தம்பருப்பு – 200 கிராம்,
அரிசி – ஒரு டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
சிறிய பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்),
கடைந்த தயிர், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.


செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து அரை மணி ஊறவைத்து, வெண்ணெய் போல் அரைக்கவும். துருவிய முள்ளங்கியைப் பிழிந்து இதனுடன் சேர்த்து… உப்பு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். இந்த மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக பொரித்து எடுக்கவும். கடைந்த தயிரில் உப்பு, சர்க்கரை சேர்த்து, பொரித்த போண்டாக்களை ஊறவிட்டு… மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் தூவி பரிமாறவும்.

Rates : 0

Loading…