முள்ளங்கி துவையல் எப்படிச் செய்வது

முள்ளங்கி துவையல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய வெள்ளை முள்ளங்கி – அரை கப்,
பெருங்காயம் – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
உடைத்த உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப),
புளி, உப்பு, கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் சிவக்க வறுத்து முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்… சப்பாத்தி, தோசை மீது தடவி பரிமாறலாம்.

Rates : 0

Loading…