வறண்ட முகம் பளபளக்க குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதை பூசுங்கள்

வறண்ட முகம் பளபளக்க குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதை பூசுங்கள்

சிலருக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். குறிப்பாக வெயில் காலத்தில், வறண்ட சருமம் நீர்ச்சத்து குறைந்து அலங்கோலமாக காட்சியளிக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கேரட் பேஷியல் ஒரு சிறந்த தீர்வு.

இரண்டு கேரட்டை மிக்சியில் போட்டு சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டீஸ்பூன் சுத்தமான மலைத்தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் முகத்தில் பூசி காய வைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும்.

இந்த கேரட் பேஷியலை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மை மறைந்து, தோல் பளபளப்பாகும். மேலும் கோடை காலத்தில் அதிக அளவு ஊருடுவும் புற ஊதாக் கதிர்களை தாங்கும் சத்துக்களும்,முகத்துக்கு கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது கேரட் ஜூஸ் குடிப்பதும் உடல் நலத்திற்கும் நல்லது.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் “சிக்”கென்று இருக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர வறண்ட சருமம் மின்னுவதை காணலாம்.

வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு எளிமையானதை உபயோகித்து வறண்ட சருமத்தை போக்கி பளபளக்கும் மேனியை பெறுங்கள்.

Rates : 0

Loading…