அருகம்புல் சப்பாத்தி எப்படிச் செய்வது

அருகம்புல் சப்பாத்தி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

அருகம்புல், கோதுமை மாவு – தேவையான அளவு,
ஏலக்காய் மற்றும் சுக்குப் பொடி – 2 கிராம்.


செய்முறை:

சாதாரணமாக சப்பாத்தி செய்யும்போது மாவு பிசைய, சேர்க்கும் தண்ணீருக்குப் பதிலாக, அருகம்புல்லை நன்கு கழுவி, அரைத்து எடுத்துவைத்த சாறோடு சேர்த்து, ஏலக்காய், சுக்குப்பொடி போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். இதனை எண்ணெய் சேர்க்காமல் சாதாரண சப்பாத்தி சுடுவது போல, சுட்டு எடுக்க வேண்டும். அருகம்புல் சாறு மிகவும் நல்லது. ஆனால் அதன் சாற்றை நேரடியாக அருந்த பலரும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

பலன்கள்:

கோதுமை, சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்.
அருகம்புல்லில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் ஏற்றது.
ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

Rates : 0

Loading…