கேரட் பனீர் லட்டு எப்படிச் செய்வது

கேரட் பனீர் லட்டு எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துருவிய கேரட் – ஒரு கப்,
துருவிய பனீர் – அரை கப்,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை – சிறிதளவு,
நெய் – 4 டீஸ்பூன்.


செய்முறை:

நெய்யில் கேரட்டை நன்கு வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: சத்துமிக்க இந்த லட்டை 2, 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

Rates : 0

Loading…