சாக்லேட் பாதுஷா எப்படிச் செய்வது

சாக்லேட் பாதுஷா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மைதா மாவு – 150 கிராம்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – அரை சிட்டிகை,
சர்க்கரை – 250 கிராம்,
பால் – ஒரு டீஸ்பூன்,
சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கிலோ,
நெய் – 2 டீஸ்பூன்,
கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன்,
தயிர் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து… மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் – சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.

குறிப்பு:

பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

Rates : 0

Loading…