தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா இத செய்ங்க சரியாயிடும்

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா இத செய்ங்க சரியாயிடும்

இன்று நிறைய பேருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. பனிக்காலம் வந்தாலே, சிலருக்கு கடுமையான தலைவலி மற்றும் தும்மல் வந்து பாடாய் படுத்திவிடும். அதோடு, ஜலதோஷம், மூக்கடைப்பு, இளைப்பு போன்ற பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படக்கூடும். இந்த சைனஸ் பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறிய பைகளில் நீர் தேங்கி, மூளை வரை சென்று பின் மூளைக்காய்ச்சலை வரவழைத்துவிடும்.

ஆனால் இந்த சைனஸ் பிரச்சனைக்கு தற்போதைய நவீன மருத்துவத்தில் சிகிச்சைகள் இருப்பதால் அஞ்சத் தேவையில்லை. சைனஸ் பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஒருசில வீட்டு வைத்தியங்களின் மூலம் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

இக்கட்டுரையில் சைனஸ் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி சைனஸ் தீவிரமாவதைத் தடுத்திடுங்கள்.

கருஞ்சீரகம்
சுவாச பிரச்சனையில் இருந்து விடுபட, ஒரு மெல்லிய துணியில் சிறிது கருஞ்சீரகத்தை எடுத்து இறுக்கமாக கட்டி சுவாசித்து வாருங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதோடு, சுடுநீரில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து, ஆவி பிடியுங்கள். இதனாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில்
சைனஸால் மூக்கு ஒழுகல் அதிகமாக உள்ளதா? அப்படியானால் ஆலிவ் ஆயிலை மூக்கு மற்றும் கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் மூக்கு ஒழுகல் நிற்பதோடு, மூக்கடைப்பில் இருந்தும் விடுவிக்கும். இது மிகவும் எளிய வழி. தவறாமல் முயற்சி செய்யுங்கள்.

சுடுநீர் ஒத்தடம்
சைனஸ் இருப்பவர்கள், சுடுநீரில் நனைத்த துணியால் மூக்கைச் சுற்றி ஒத்தடம் கொடுப்பதன் மூலம், சைனஸில் இருந்து நிவாரணம் அளிக்கும். முக்கியமாக இச்செயலால் சளியால் மூக்கைச் சுற்றி ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயம், பூண்டு
வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு வெங்காயம் மற்றும் பூண்டை ஆரம்பத்தில் சிறிய அளவில் எடுக்க ஆரம்பித்து, பின் மெதுவாக அதிகரியுங்கள். வேண்டுமானால் இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்தும் கொள்ளலாம்.

கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸில் உள்ள மருத்துவ குணங்கள், சைனஸ் பிரச்சனைக்கு நல்ல சிகிச்சை வழங்கும். ஆகவே சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வருவது நல்லது. வேண்டுமானால், கேரட் ஜூஸ் உடன் பீட்ரூட், வெள்ளரிக்காய் அல்லது பசலைக்கீரை சாற்றினையும் கலந்து கொள்ளலாம்.

ஆவி பிடிப்பது
சைனஸ் பிரச்சனை சற்று அதிகமாக இருந்தால், தினமும் 4-5 முறை நல்ல சூடான நீரால் ஆவி பிடியுங்கள். இதனால் நாசி துவாரங்களில் உள்ள சளி இளகி வெளியேறி, சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

மாம்பழம்
சைனஸ் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ, எபிதீலியம் படலத்தின் வலிமையை மேம்படுத்த உதவி, சைனஸ் தொற்றுகளைத் தடுக்கும். இது சைனஸ் பிரச்சனைக்கான மிகவும் பிரபலமான ஓர் இயற்கை வழி.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

வெஜிடேபிள் ஜூஸ்
கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், பசலைக்கீரை போன்ற ஜூஸ்களை ஒன்றாக கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் 100 மிலி வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் 300 மிலி கேரட் ஜூஸ் கலந்து குடித்தால், சைனஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்
மிகவும் சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து, 10-15 நிமிடம் ஆவி பிடியுங்கள். இதனால் நாசி துவாரங்களில் உள்ள சளி இளகி வெளியேறி, சளி பிரச்சனை போவதோடு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், மூக்கைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் தலை பாரம் போன்ற சைனஸ் பிரச்சனைகளும் நீங்கும்.

சூடான சூப்
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், சூடான சூப்பில் சில துண்டுகள் பூண்டு பற்களை நறுக்கிப் போட்டு அடிக்கடி குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுதலை அளிக்கும். முயற்சித்துப் பாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தய விதை
வெந்தய விதை சைனஸ் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை 250 மிலி நீரில் போட்டு, நீர் பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் கொள்ளுங்கள். சைனஸால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட இந்த பானத்தைக் குடியுங்கள். மேலும் இந்த பானம் உடலில் இருந்து நச்சுக்களையும் வெளியேற்றும்

Rates : 0

Loading…