துளசி ஆரஞ்சுச் சாறு எப்படிச் செய்வது

துளசி ஆரஞ்சுச் சாறு எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

துளசி – 5 கிராம்,
பழுத்த ஆரஞ்சு – 2,
ஆரஞ்சுப் பழத் தோல் – ஒரு துண்டு,
சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஆரஞ்சுப் பழத்தின் விதைகளை எடுத்து, அதனைச் சாறு பிழிந்துகொள்ள வேண்டும். அதனுடன் துளசியை நறுக்கிச் சேர்த்து ஆரஞ்சு பழத் தோலையும் சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து, சர்க்கரை சேர்த்தால், துளசி – ஆரஞ்சு பானம் தயார். மிக விரைவில் தயாரிக்கக்கூடிய எளிய வகை பானம் இது.

பலன்கள்:

வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள் இந்தச் சாற்றை அருந்துவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
முகப் பளபளப்பை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
துளசியானது வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, சளி, கபம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

Rates : 0

Loading…