மூட்டு வலிக்கு 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெய் போதும்

மூட்டு வலிக்கு 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெய் போதும்

உணவிற்கு மணத்தைத் தரும் கருப்பு ஏலக்காய், மசாலா பொருட்களின் ராணியாகும். இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆயுர்வேதத்தில் கருப்பு ஏலக்காய் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, கருப்பு ஏலக்காய் பித்தத்தைக் அதிகரிக்கும் மற்றும் கபம் மற்றும் வாதத்தை நிலையாக வைத்துக் கொள்ள உதவும்.

கருப்பு ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, செரிமானத்தை எளிதாக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் செரிமானத்தின் போது சத்துக்களை உறிஞ்ச உதவி புரியும். இந்த மசாலாப் பொருள் இனிப்பாகவும், சற்று காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருப்பு ஏலக்காயின் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

கீழே உடல் எடையைக் குறைக்கவும், இதர பிரச்சனைகளை சரிசெய்யவும் கருப்பு ஏலக்காயை எப்படி பயன்படுத்துவது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்….

மூட்டு வலி மற்றும் தலை வலி
மூட்டு வலி, தலைவலி அதிகம் இருந்தால், 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் மூட்டு மற்றும் வலியுள்ள தலைப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

எடை குறைய…
ஒரு ஏலக்காயின் விதைகளை பொடி செய்து கொள்ளுங்கள். பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, இந்த பொடியை சேர்த்து அடுப்பை அணைத்து, மூடி வைத்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.

ஈறு நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம்
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் ஒரு கருப்பு ஏலக்காயை தட்டிப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, 5 நிமிடம் கழித்து, வடிகட்டி, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் இரண்டு வேளை செய்து வந்தால், ஈறு நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விரைவில் விடுபடலாம். வேண்டுமானால் ஒரு கருப்பு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அஜீரண கோளாறு
உணவு உண்ணும் முன் சிறிது கருப்பு ஏலக்காய் விதைகளை வாயில் போன்று மெல்லுங்கள். இதனால் பசியுணர்வு தூண்டப்படும் மற்றும் அஜீரண கோளாறும் தடுக்கப்படும். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் சிறிது கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் குமட்டல் உணர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மன அழுத்தம்
நெற்றி மற்றும் கழுத்து பகுதியை ஏலக்காய் எண்ணெய் சேர்க்கப்பட்ட தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து வருவதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் தசை வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த எண்ணெயால் மசாஜ் செய்வதன் மூலம் விடுபடலாம்.

இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகச்சிறப்பான பொருள். அதுவும் ஒரு டம்ளர் சுடுநீரில் கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

இரத்த சுத்தம்
அசுத்தமான இரத்தம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். இப்படிப்பட்ட இரத்தத்தை எளிய வழியில் சுத்தம் செய்ய நினைத்தால், ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் கருப்பு ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள்.

முகப்பரு
ஒரு கருப்பு ஏலக்காயின் விதைகளை எடுத்து பொடி செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்கள் உள்ள முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுஙகள். இதனால் பருக்களில் இருந்து விடுபடலாம்.

Rates : 0

Loading…