லெமன்கிராஸ் நெல்லி இலை டீ எப்படிச் செய்வது

லெமன்கிராஸ் நெல்லி இலை டீ எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

லெமன்கிராஸ், நெல்லி இலை (உலர்த்திய கலவை) – ஒரு டீஸ்பூன்,
தேன் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

நறுக்கிய லெமன் கிராஸ் 3 பங்கு என்றால், அதில் ஒரு பங்கு முழுநெல்லி இலைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் நிழல்காய்ச்சலாக உலரவிட வேண்டும். நன்கு உலர்ந்ததும், ஒரு பாட்டிலில் எடுத்துவைத்துக்கொள்ளலாம். டீ போடும்போது, முக்கால் டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, 2 சிட்டிகை லெமன் கிராஸ், நெல்லி இலைக் கலவையை எடுத்துப் போட்டு மூடிவிட வேண்டும். ஐந்து நிமிஷங்களில், அதிலிருக்கும் சத்துக்கள் தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்:

நல்ல ரெஃப்ரஷ்னர். உடம்புக்குப் புத்துணர்ச்சி ஊட்டும். உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட நீரை வெளியேற்றும். நீண்ட தூரப் பிரயாணம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காலில் நீர் கட்டி, வீங்கிக்கொள்ளும். அவர்கள் இந்த டீ குடித்தால், நீர் வடிந்துவிடும். நெல்லி இலை, முதுமையைத் தள்ளிப்போடும்.

Rates : 0

Loading…