வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு எப்படிச் செய்வது

வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை – தலா 50 கிராம்,
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு – தேவையான அளவு.


செய்முறை:

முதலில் பருப்பையும் கீரையையும் நன்றாக வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். வெங்காயம், கடுகு ஆகியவற்றைச் சிறிது உப்பு சேர்த்து தாளித்து இதனைக் கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்:
வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. விட்டமின் சி உடையது.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்பதன் மூலம் அதனைக் கட்டுக்குள் வைக்கலாம்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

Rates : 0

Loading…