கிரிஸ்பி பனானா எப்படிச் செய்வது

கிரிஸ்பி பனானா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நேந்திரன் வாழை – ஒன்று,
மைதா – ஒரு கப்,
சர்க்கரை – 5 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், ஓட்ஸ் – தேவைக் கேற்ப,
உப்பு – கால் டீஸ்பூன்.


செய்முறை:

நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்க வும். ஓட்ஸை ஒரு தட்டில் பரப்பவும். சலித்த மைதாவுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும். வெட்டிய வாழைப்பழ துண்டுகளை மாவில் முக்கி எடுத்து தட்டில் வைத்துள்ள ஓட்ஸ் மீது புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்… கிரிஸ்பி பனானா ரெடி!

Rates : 0

Loading…