பலாச்சுளை இலை அடை எப்படிச் செய்வது

பலாச்சுளை இலை அடை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளைகள் – 20,
வெல்லம் – ஒரு கப்,
அரிசி மாவு – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
வாழை இலை – 5, நெய் – 5 டீஸ்பூன்.


செய்முறை:

பலாச்சுளையை நெய்யில் வதக்கி ஆறவிட்டு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும். வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, ஆவியில் வேகவிடவும்.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

Rates : 0

Loading…