பலாச்சுளை பொரியல் எப்படிச் செய்வது

பலாச்சுளை பொரியல் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளைகள் – 15,
பொடித்த வெல்லம் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து… பலாச்சுளைகளை சேர்த்து வதக்கவும். பிறகு, லேசாக தண்ணீர் தெளித்து பலாச்சுளைகளை வேகவிடவும். வெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்

Rates : 0

Loading…