பலாப்பழ அப்பளம் எப்படிச் செய்வது

பலாப்பழ அப்பளம் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

கெட்டியான பலாச்சுளைகள் – 10,
காய்ந்த மிளகாய் – 4,
பெருங்காயம், உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – சிறிதளவு,


செய்முறை:

பலாச்சுளைகளை கொட்டை நீக்கி, ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்பு சுளைகளுடன் உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். எண்ணெய் தடவிய வாழை இலை மீது பலாப்பழ கலவையை ஒரு சிறிய உருண்டையாக வைத்து, மேலே மற்றொரு இலையால் மூடி, ஒரு கிண்ணம் வைத்து அழுத்தி, சுற்றியும் இந்த அப்பளத்தை தயாரிக்கலாம்.

Rates : 0

Loading…