ஆலு கச்சோரி எப்படிச் செய்வது

ஆலு கச்சோரி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4,
தேங்காய் துருவல் – அரை மூடி,
பச்சை மிளகாய் – 4,
வேர்க்கடலை (பொடித்தது) – 5 டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
சோள மாவு – 4 டீஸ்பூன்,
சீரகம் – சிறிதளவு,
எண்ணெய் – உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… அரைத்த தேங்காய் விழுது, உப்பு, சர்க்கரை, பொடித்த வேர்க்கடலை சேர்த்து பூரணம் போல கிளறி, ஆறவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து துருவவும். இதனுடன் உப்பு, சோள மாவு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டுப் பிசையவும். இந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு போல செய்து, பூரணத்தை நடுவில் வைத்து மூடி, தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

Rates : 0

Loading…