இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா எப்படிச் செய்வது

இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) – 150 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
பொடித்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சிச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:

எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.

Rates : 0

Loading…