சாபுதானா காராபூந்தி எப்படிச் செய்வது

சாபுதானா காராபூந்தி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

ஜவ்வரிசி – ஒரு கப்,
மிளகு – 4 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:

மிளகை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும். பின்பு, கறிவேப்பிலையை பொரிக்கவும். வேறொரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு… மஞ்சள்தூள், பொரித்த ஜவ்வரிசி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி எடுத்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்துப் பயன்படுத்தவும்.

Rates : 0

Loading…