சுருள் போளி எப்படிச் செய்வது

சுருள் போளி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

மைதா – ஒரு கப்,
கடலை மாவு – ஒரு கப்,
சர்க்கரை (பொடித்தது) – முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் – கால் கப்,
துருவிய கலர் கொப்பரை – 2 டீஸ்பூன்,
நெய் – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கிலோ,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து… பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் இடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவவும்.

Rates : 0

Loading…