ஜிஞ்சர் பொடி எப்படிச் செய்வது

ஜிஞ்சர் பொடி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

இஞ்சி – ஒரு பெரிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 3,
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,
புளி – கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
வேர்க்கடலை – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.


செய்முறை:

வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கவும். புளி, பெருங்காயம், தோல் சீவி துண்டுகளாக் கிய இஞ்சி ஆகியவற்றை தனியே வறுக் கவும். ஆறிய பின் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… மழைக்காலத்தில் விறுவிறுப்பான சுவை தேடும் நாவுக்கு இதமாக இருக்கும்!

Rates : 0

Loading…