டொமேட்டோ கார சட்னி எப்படிச் செய்வது

டொமேட்டோ கார சட்னி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தக்காளி – 2, வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 6 பல்,
பச்சை மிளகாய் – 3,
கடுகு – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து பொடியாக நறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…