பிரெட் பொட்டேட்டோ சாண்ட்விச் எப்படிச் செய்வது

பிரெட் பொட்டேட்டோ சாண்ட்விச் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ்கள் – 5,
உருளைக்கிழங்கு – 4,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு பிசையவும். பிரெட் ஸ்லைஸ்களை இரண்டாக முக்கோண வடிவில் வெட்டவும். ஒரு பிரெட் துண்டு மீது சிறிதளவு வெண்ணெய் தடவி, அதன் மீது மசித்த உருளைக்கிழங்கு கலவை சிறிதளவு தடவி, அதன் மேல் வெள்ளை எள்ளை பரவலாக தூவவும். தவாவில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருக்கி, உருளை மசாலா தடவிய பிரெட் துண்டை வைத்து, அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

Rates : 0

Loading…