மிளகு சால்னா எப்படிச் செய்வது

மிளகு சால்னா எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

உளுந்து – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
புளி – எலுமிச்சை அளவு,
மிளகு – 4 டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,
பெருங் காயம் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து உளுந்து, மிளகை வறுத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வறுக்கவும். பிறகு, இதை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். மீண்டும் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Rates : 0

Loading…