மூங்தால் ஃபிரிட்டர்ஸ் எப்படிச் செய்வது

மூங்தால் ஃபிரிட்டர்ஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பாசிப்பருப்பு – ஒரு கப்,
கொத்தமல்லித் தழை – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு.


செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அரைக் கவும். பச்சை மிளகாயைப் பொடி யாக நறுக்கவும். கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்பு விழுது டன் உப்பு, சமையல் சோடா, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்கவும்.

Rates : 0

Loading…